மேற்கிந்தியத்தீவுகளை வீழ்த்தியது பங்களாதேஷ்

மேற்கிந்தியத்தீவுகளை வீழ்த்தியது பங்களாதேஷ்

மேற்கிந்தியத்தீவுகளை வீழ்த்தியது பங்களாதேஷ்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2018 | 5:42 pm

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஷ் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் கைப்பற்றியது.

Lauderhill இல் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சார்பில் லிட்டன் தாஸ் 32 பந்துகளில் 61 ஓட்டங்களை விளாசினார்.

மஹமதுல்லா ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் அணித்தலைவர் சஹீப் அல் ஹசன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, 17.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது.

இதன்படி, பங்களாதேஷ் அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதிரடியாக விளையாடிய ஒன்ரே ரஸல், மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் 6 சிக்சர்களுடன் 21 பந்துகளில் 47 ஓட்டங்களை விளாசினார்.

முஸ்டபிஸூர் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக லிட்டன் தாஸ் தெரிவானார்.

தொடர் முழுவதும் பிரகாசித்த சஹீப் அல் ஹசன் தொடரின் நாயகனுக்காக விருதைத் தட்டிக் கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்