புலத்சிங்கள கொள்ளை – ஐவர் கைது

புலத்சிங்கள கொள்ளை – ஐவர் கைது

புலத்சிங்கள கொள்ளை – ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2018 | 3:31 pm

புலத்சிங்கள பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுசெல்லப்பட்ட ஒரு ​கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் பணத்தில் ஒரு கோடியே 65 லட்சத்துக்கும் அதிக பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கொலம்பகேஆர, செவனகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு தொகையை கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடநத் 28 ஆம் திகதி புலத்சிங்கள பகுதியில் வேனொன்றில் பணத்தை கொண்டு சென்றவர்கள், உணவு உட்கொள்வதற்காக வாகனத்தை நிறுத்தியிருந்த நிலையில் கொள்ளையர்கள் அவர்கள் மீது மிளகாய் தூளை தூவி தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்