நிலையான அபிவிருத்தித் திட்ட வௌியீடு ஜனாதிபதி தலைமையில்

நிலையான அபிவிருத்தித் திட்ட வௌியீடு ஜனாதிபதி தலைமையில்

நிலையான அபிவிருத்தித் திட்ட வௌியீடு ஜனாதிபதி தலைமையில்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2018 | 1:52 pm

நிலையான அபிவிருத்தி இலக்கை 2030 ஆம் ஆண்டளவில் அடைந்து கொள்ளல் எனும் தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்ட நிலையான தேசிய அபிவிருத்தி கொள்கைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (06) நடைபெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

தேசிய நிபுணர் குழுவினரால் தயாராக்கப்பட்ட நிலையான தேசிய அபிவிருத்தி கொள்கைத் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையரிடையே காணப்படும் கருத்துக்கள் மற்றும் திறன்களை அடிப்படையாக கொண்டு அடுத்த 12 வருடங்களுக்கு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய நீண்டகால பொருளாதார மற்றும் சமூக, சூழல் அபிவிருத்தி நோக்குகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆகியோரை இலக்கு வைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்