by Staff Writer 06-08-2018 | 2:10 PM
இந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
இதன்மூலம், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் நிரல்படுத்தலில் முதலிடத்துக்கு முன்னேறிய 7ஆவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் நிரல்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் நிரல்படுத்தலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் நிரல்படுத்தலில் அவர் முதலிடத்துக்கு முன்னேறிய முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் சிறப்பம்சமாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 51 ஓட்டங்களையும் பெற்றதையடுத்து, ஒட்டுமொத்தமாக 934 புள்ளிகளை ஈட்டியுள்ளார்.
இதற்கு முன்னர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டிவன் ஸ்மித் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.