ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 Aug, 2018 | 6:44 am

Colombo (News 1st)

உள்நாட்டுச் செய்திகள்

01. மன்னாரில், நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற 102 ஆவது உதா கம்மான வீடமைப்புத் திட்ட நிகழ்வின்போது, பேருவளை கலவரத்திற்குக் காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே என அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.

02. 2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடந்த சம்பவங்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி பொறுப்பு கூற வேண்டுமா? இல்லையா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

03. மஹிந்தானந்தவுக்கு முதுகெலும்பிருக்கவில்லை. அன்று நுகேகொட கூட்ட மேடையில் ஏறுவதற்கு முதுகெலும்பிருக்கவில்லை. ஒழிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வாறாயின் யார் கோமாளி? என பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முன்வரிசை உறுப்பினருமான குமார வெல்கம கேள்வியெழுப்பியுள்ளார்.

04. வாத்துவ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில், சுகயீனமுற்ற மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த நிகழ்வில், சமூக வலைத்தளத்தின் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

05. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி எந்தவொரு வேட்பாளராலும் வெற்றி பெறமுடியாது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவை இலக்கு வைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

01. இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 78 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்