சிக்காகோவில் ஏழு மணித்தியாலத்தில் 40 துப்பாக்கிச்சூடுகள்

சிக்காகோவில் ஏழு மணித்தியாலத்தில் 40 துப்பாக்கிச்சூடுகள்

சிக்காகோவில் ஏழு மணித்தியாலத்தில் 40 துப்பாக்கிச்சூடுகள்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2018 | 5:05 pm

சிக்காகோவில் 7 மணித்தியாலங்களுக்குள் 40 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சிக்காகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று (05) காலை வரையிலான 7 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குழு மோதல்கள் காரணமாகவே இந்த வன்முறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தில் வன்முறைகள் குறைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்