கொழும்பு மாநகர ஆணையாளர் மீண்டும் சேவையில்

கொழும்பு மாநகர ஆணையாளர் மீண்டும் சேவையில்

கொழும்பு மாநகர ஆணையாளர் மீண்டும் சேவையில்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2018 | 4:48 pm

கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.அனுர மீண்டும் கொழும்பு மாநகர ஆ​ணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல நிபந்தனைகளுடன் வீ.கே.அனுர மீண்டும் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.

இதற்கிணங்க பதில் நகர ஆணையாளராக இதுவரை கடமையாற்றிய லலித் விக்ரமரத்ன மீண்டும் கொழும்பு மாநகர பிரதி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்