இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் 82 பேர் பலி!

இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் 82 பேர் பலி!

இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் 82 பேர் பலி!

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 Aug, 2018 | 7:36 am

இந்தோனேஷியாவின் லொம்போக் தீவகத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

10 கிலோமீற்றர் ஆழத்தில், 7 ரிச்டர் அளவில் பதிவாகிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால், ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் இதன்போது, விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரங்களில் அகற்றப்பட்டுள்ளது.

லொம்போக் தீவிலுள்ள சுற்றுலாப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, குறைந்தது 16 பேர் பலியாகி, ஒரு வாரத்தில் மீண்டும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்