வெனிசூலா ஜனாதிபதியை இலக்குவைத்து தாக்குதல்!

வெனிசூலா ஜனாதிபதியை இலக்குவைத்து தாக்குதல்!

by Staff Writer 05-08-2018 | 10:00 PM

வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவை இலக்கு வைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெனிசூலா தலைநகர் கரகாசில் நடைபெற்ற இராணுவ நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, உரையாற்றும்போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தாக்குதலில் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவிற்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், இராணுவ வீரர்கள் 7 பேருக்கு மட்டும் காயமேற்பட்டுள்ளதாக அந்நாட்டு தொடர்பாடல் அமைச்சர் ஜோர்ஜ் ரொட்ரிகுவேஸ் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மதுரோவுடன் அவரது பாரியார் சிலியா புளோரஸூம் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வெனிசூலாவில் அரசாங்கத்திற்கு எதிராக அண்மைக் காலமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நிக்கலஸ் மதுரோவின் ஆட்சியின் கீழ், நாட்டில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை ஆகியவற்றுடன் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சியினரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.