மஹிந்தானந்தவுக்கு முதுகெலும்பிருக்கவில்லை. அன்று நுகேகொட கூட்ட மேடையில் ஏறுவதற்கு முதுகெலும்பிருக்கவில்லை. ஒழிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வாறாயின் யார் கோமாளி? - என பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முன்வரிசை உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் டீல் அடிப்பவர்கள் எமது எதிர்க்கட்சியிலுள்ளனர். நான் அச்சமின்றி கூறுகின்றேன். என்னால் கூற முடியும். எனினும் நான் கூறுவதில்லை. மேலே பார்த்து எச்சில் துப்பமுடியாது. மஹிந்த ராஜபக்ஸ ஏதேனும் தவறிழைக்கும்போது, அதனை முகத்திற்கு நேராக கூறுவோம். ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்கள் எமக்குத் தேவை. வேறு யாரும் தேவையில்லை. அவ்வாறில்லாமல், அரசியல் செய்யாதவர்கள் அவசியமில்லை. நான் நேர்மையாக பேசுபவன். பயப்படவில்லை. நாளை என்னை கொலை செய்தாலும், நாட்டிற்காக நான் கூற வேண்டியதைக் கூறுவேன். எனக்குப் பதவிகள் தேவையில்லை. நான் 65 வயதைத் தாண்டியுள்ளேன். நான் பாராளுமன்றத்தில் 25 வருடங்கள் இருந்தேன்
எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.