ஒரு இலட்சம் விவசாயிகள் நடுத்தெருவில்

ஒரு இலட்சம் விவசாயிகள் நடுத்தெருவில்

by Staff Writer 05-08-2018 | 7:04 PM

பயிர்செய்கை பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் வரையிலான விவசாயிகளுக்கு நட்ட ஈடு இதுவரை வழங்கப்படவில்லையென இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதனால் விவசாயிகள் கடும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக சம்மேளனத்தின் ​தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அம்பாறை, மொனராகரல, மகியங்கனை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் பயிர்ச்செய்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் விவசாய பாதுகாப்பு சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துல வீரசிங்கவிடம் நாம் வினவினோம். இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் 75 வீதமான நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.