வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 04-08-2018 | 6:29 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம், இதுவரை எடுக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 02. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்காட்லாண்ட் தமிழ் தேசிய‍க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்று (03) சந்தித்துக் கலந்துரையாடினார். 03. தமக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த சத்தியக்கடதாசியை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (03) நிராகரித்துள்ளது. 04. மக்கள் வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரான ஜெஹான் அமரதுங்க, பணிப்பாளராக செயற்படும் நிறுவனமொன்றுக்கு 10 பில்லியன் கடன் வழங்கியமை தொடர்பில் மத்திய வங்கியின் உதவி ஆளுநர் D.M.J.Y.P. பெர்னாண்டோ பதிலளித்துள்ளார். 05. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவிடம் விடயங்களைக் கோரியுள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. மரணதண்டனைகள் ஏற்புடையவை அல்ல என கத்தோலிக்க மதத்தலைவர் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளின் முதல்நாளில், மகளிருக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க புதிய இலங்கை சாதனையை படைத்ததோடு, ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதலில் கயான் ஜயவர்தன புதிய சாதனையை நிகழ்த்தினார்.