ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்தில் 18 பேர் பலி

ரஷ்ய ஹெலிகொப்டர் விபத்தில் 18 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 04-08-2018 | 1:59 PM
ரஷ்ய ஹெலிகொப்டர் ஒன்று ரஸ்னொயார்ஸ்க் நிலப்பகுதியில் (Krasnoyarsk Territory) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. MI-8 ரக விமானம், கார்க்கா நகரிலிருந்து 180 கிலோமீற்றர் தொலைவில் உள்நாட்டு நேரப்படி காலை 10.30க்கு வீழ்ந்துள்ளதாக ரஷ்ய இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வௌியிடப்படவில்லை. இந்தநிலையில், விபத்தில் பலியானவர்களுள், பணியாளர்கள் 3 பேரும் பயணிகள் 15 பேரும் அடங்குவதாக தகவல்களை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.