பசுமை பூமி திட்டத்தின் கீழ் மாத்தளையில் 700 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் கையளிப்பு
by Bella Dalima 04-08-2018 | 8:35 PM
Colombo (News 1st) பசுமை பூமி திட்டத்தின் கீழ் 700 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் இன்று மாத்தளையில் வழங்கி வைக்கப்பட்டது.
700 குடும்பங்களுக்கு 7 பேர்ச்சஸ் வீதம் அரச பெருந்தோட்ட காணிக்கான உறுதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
கந்தேநுவர, எல்கடுவ, செம்பூவத்தை, ஓபல்கல, நிக்கலோயா, உனுகல மற்றும் தம்பலகல ஆகிய தோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.