துறைமுக நகரால் பெறுமதி இழக்கும் கொழும்பு

துறைமுக நகரால் பெறுமதி இழக்கும் கொழும்பு

by Bella Dalima 04-08-2018 | 5:57 PM
Colombo (News 1st)  சீனாவினால் முன்னெடுக்கப்படும் Belt and Road திட்டத்திற்காக உலகம் முழுவதும் துறைமுகங்களும் பெருந்தெருக்களும் நிர்மாணிக்கப்பட்ட போதிலும், இலங்கையில் கொழும்பிற்கு அருகில் புதிய வணிகத் தலைநகரொன்று நிர்மாணிக்கப்படுகின்றது. அது கொழும்பு துறைமுக நகரமாகும். 1.4 பில்லியன் டொலர் சீன முதலீட்டுடன் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு நகரின் ஈர்ப்பு மற்றும் வணிகப் பெறுமதியை விரைவில் இந்த துறைமுக நகரம் கையகப்படுத்தும் என பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது. இது ஆசியாவில் நிர்மாணிக்கப்படும் மற்றுமொரு துபாய் நகரமாகக்கூடும் எனவும் இதனால் ஒரு தலைநகராக கொழும்பின் ஈர்ப்பும் பெறுமதியும் குறைவடைவதைத் தடுக்க முடியாது எனவும் கார்டியன் பத்திரிகை செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த துறைமுக நகரத்தின் நிர்மாணத்துடன், கொழும்பு நகரின் தோற்றம், பொருளாதாரம் மற்றும் சமூகப்பெறுமதி ஆகியவற்றை திரும்பிப்பெற முடியாதளவில் மாற்றம் ஏற்படக்கூடும்.