தலவில திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில்சேவை

தலவில தேவாலய திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில்சேவை

by Staff Writer 04-08-2018 | 9:11 AM
Colombo (News 1st) தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று (04) முதல் விசேட ரயில்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், கொழும்பு முதல் பாலாவி வரையும் மொறட்டுவ முதல் பாலாவி வரையிலும் விசேட ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று காலை 9.35 க்கு சிலாபம் வரையில் பயணிக்கும் ரயில், பாலாவி வரை சேவையில் ஈடுபடவுள்ளது. அத்துடன், பிற்பகல் 1.10 க்கு கொழும்பிலிருந்து மாதம்பே வரை செல்லும் ரயில், பாலாவி மற்றும் புத்தளம் வரை பயணிக்கவுள்ளது. மொறட்டுவயிலிருந்து மேலதிக ரயிலொன்றும் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.