சிலியில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை

சிலியில் பிளாஸ்டிக் பை பாவனைக்குத் தடை

by Chandrasekaram Chandravadani 04-08-2018 | 9:54 AM
தென் அமெரிக்க நாடான சிலியில் வர்த்தகச் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் பைகள் (Plastic) பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்த முதல் தென் அமெரிக்க நாடாக சிலி அமைகிறது. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவால் (Sebastián Piñera) இயற்றப்பட்டு காங்கிரஸால் அனுமதிக்கப்பட்ட இந்த சட்டம், பிளாஸ்டிக் பாவனையை முற்றாகத் தடை செய்வதற்கு சிறிய கடைகளிற்கு 2 வருட கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேநேரம், பெரியளவிலான வர்த்தக நிலையங்களிற்கு 6 மாத காலமே வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒரு வாடிக்கையாளரிற்கு 2 கைப்பைகளை வழங்குவதற்கே அனுமதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் இந்தச் சட்டத்தை மீறும் பட்சத்தில் 370 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் கிட்டத்தட்ட 59,000 ரூபா) வரை அபராதம் விதிக்கப்படும்.