ரிஷாட் பதியுதீனின் சத்தியக்கடதாசி நிராகரிப்பு

ரிஷாட் பதியுதீனின் சத்தியக்கடதாசியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

by Staff Writer 03-08-2018 | 3:27 PM
Colombo (News 1st)  தமக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த சத்தியக்கடதாசியை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. சட்டத்தரணி நாகஹநந்த கொடித்துவக்கு மற்றும் ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்ன ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி பீ. பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன்போது, குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களை மீள்குடியேற்றம் செய்கின்ற போர்வையில் வில்பத்து வனப்பகுதியை சூழவுள்ள பல ஏக்கர் காணிகளை அழிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 7 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.