தேசிய மெய்வல்லுநர்: முதல் நாளில் 2 இலங்கை சாதனைகள்

தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் முதல் நாளில் 2 இலங்கை சாதனைகள்

by Staff Writer 03-08-2018 | 4:56 PM
Colombo (News 1st)  தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் நாளான இன்று இரண்டு இலங்கை சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. மகளிருக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க புதிய இலங்கை சாதனையை படைத்தார். போட்டியை அவர் 9 நிமிடங்கள், 46.76 செக்கன்ட்களில் பூர்த்தி செய்தார். ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதலில் கயான் ஜயவர்தன புதிய இலங்கை சாதனையை நிகழ்த்தினார். போட்டியில் அவர் 56.40 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இந்தப் போட்டியில் 45.21 மீட்டர் தூரத்திற்கு திறமையை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண வீரரான Z.T.M. ஆஷிக் சிறந்த பெறுதியுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்​. கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை மறுதினம் (5) வரை நீடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.