யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2018 | 4:36 pm

Colombo (News 1st)  யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18, 19, 20, 21, 22 ,29 வயதான இளைஞர்களே குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 7 பேரும் மானிப்பாய், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, ஆணைக்கோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்