மக்கள் வங்கி பணிப்பாளருக்கு கடன்: தகவல்களை வௌியிட மறுத்த மத்திய வங்கி

மக்கள் வங்கி பணிப்பாளருக்கு கடன்: தகவல்களை வௌியிட மறுத்த மத்திய வங்கி

மக்கள் வங்கி பணிப்பாளருக்கு கடன்: தகவல்களை வௌியிட மறுத்த மத்திய வங்கி

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2018 | 9:11 pm

Colombo (News 1st) மக்கள் வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரான ஜெஹான் அமரதுங்க, பணிப்பாளராக செயற்படும் நிறுவனமொன்றுக்கு 10 பில்லியன் கடன் வழங்கியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய வங்கி உதவி ஆளுநர் D.M.J.Y.P. பெர்னாண்டோ பின்வருமாறு பதிலளித்தார்,

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பதில் வழங்க முடியாது. எனினும், பணிப்பாளர் ஒருவர் கடன் பெறும் முறையை நான் தெளிவூட்டுகின்றேன். பணிப்பாளர் ஒருவர் தாம் சேவையாற்றும் வங்கியில் இருந்து கடனைப் பெறுவதற்கு எதிராக தடையொன்றுமில்லை. எனினும் கடுமையான சட்டங்கள் காணப்படுகின்றன. கண்காணிப்புக்குழு இந்த கடன் தொகைக்கான அனுமதியை வழங்க வேண்டும். இதன்போது கடனைக் கோரும் பணிப்பாளரை தவிர்த்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட வேண்டும். பணிப்பாளர் ஒருவர் கடனைப்பெறும் போது அவர் அதனை பெற்றுக்கொள்ள வேண்டிய முறை தொடர்பில் மத்திய வங்கி நேரடியாக தௌிவூட்டியுள்ளது. உரிய பிணையம் வழங்கப்பட வேண்டும். சாதாரண கடனை பெறுவதை விட இது வேறுபட்டவொன்றாகும். இந்த கடனை பெறுவதில் சிக்கல் காணப்படவில்லை. இவ்வாறான கடன் கொடுக்கல் வாங்கலின் போது, மிகவும் விரிவாக ஆராய வேண்டும். எமது அதிகாரிகள் இது தொடர்பில் ஆராய்ந்து, சிக்கல்கள் காணப்பட்டால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை சரி செய்வார்கள். அதனால் இது அவ்வாறான கொடுக்கல் வாங்கலாக இருக்கலாம். அது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகள் இல்லாவிடின் நடவடிக்கைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது. ஏனெனில், எமது சட்ட வரைபுகளுக்கு அமைய நாம் அவ்வாறான கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்