புத்தளம் – தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியது

புத்தளம் – தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியது

புத்தளம் – தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியது

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2018 | 7:51 pm

Colombo (News 1st)  புத்தளம் – கற்பிட்டி, தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது.

தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கலமொன்று இறந்த நிலையில் காணப்படுகின்றமையை அவதானித்த மக்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

சுமார் 25 அடி நீளமான இந்த திமிங்கிலம் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறியதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புத்தளம் – ஆலங்குடா கடற்கரையோர பகுதியில் இறந்த நிலையில் கடந்த மாதம் 16 ஆம் திகதி திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்