சீனியில் யூரியா கலப்பு: வவுனியா சதொச தற்காலிகமாக மூடல்

சீனியில் யூரியா கலப்பு: வவுனியா சதொச தற்காலிகமாக மூடல்

சீனியில் யூரியா கலப்பு: வவுனியா சதொச தற்காலிகமாக மூடல்

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2018 | 4:28 pm

Colombo (News 1st)  வவுனியா சதொச விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சீனியில் தவறுதலாக யூரியா கலக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் சதொச விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் (02) ஊழியர் ஒருவரால் யூரியா உரம் தவறுதலாக சீனி மூடைக்குள் கொட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொதுசுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்