by Staff Writer 03-08-2018 | 4:07 PM
Colombo (News 1st) 32 இலட்சம் ரூபா பெறுமதியான 5 தங்க பிஸ்கட்களுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர் ஒருவரிடமிருந்து அவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க உதவி பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.
சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரே 500 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்களை குறித்த ஊழியருக்கு வழங்கியுள்ளார்.
சிங்கப்பூர் பிரஜை குறித்த விமான நிலைய ஊழியர் மூலம் தங்க பிஸ்கட்களை விமான நிலையத்திற்கு வௌியே கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.