அம்பாறையில் பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதம்

அம்பாறையில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதம்

by Staff Writer 03-08-2018 | 3:38 PM
Colombo (News 1st)  அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் நவகம்புர, சத்தானிஸ்ஸபுர, மிஹிந்துபுர, ஜயவர்தனபுர, ஹரங்காவ ஆகிய பகுதிகளை ஊடறுத்து பலத்த காற்று வீசியுள்ளது. சுமார் 10 நிமிடங்கள் பலத்த காற்று வீசியுள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் துசித பீ வனிகசிங்க தெரிவித்துள்ளார். பலத்த காற்றினால் சுமார் 5000 வீடுகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மின் விநியோகத்தை விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, சேதமடைந்த வீடுகளுக்கு தலா 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.