மாமன் மச்சானாகும் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்

மாமன் மச்சானாகும் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்

மாமன் மச்சானாகும் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2018 | 5:01 pm

நடிகர் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் சசி இயக்கத்தில் மாமன், மச்சானாக நடிக்கவிருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான `பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு ரெட்டைக்கொம்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. குடும்பக்கதையாக உருவாகும் இதில் இருவரும் மாமன் மச்சானாக நடிக்கிறார்கள். சித்தார்த் டிராபிக் பொலிசாகவும், ஜிவி.பிரகாஷ் பைக் ரேஸ் வீரராகவும் நடிக்கிறார்கள். முதலில் இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இப்போது வேறு ஒருவர் தயாரிக்க இருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்