கார்களுக்கான வரி அதிகரிப்பு

என்ஜின் கொள்ளளவு 1000ற்கும் குறைந்த கார்களுக்கான வரி அதிகரிப்பு

by Staff Writer 01-08-2018 | 12:44 PM
Colombo (News 1st) என்ஜின் கொள்ளளவு 1000 சீ.சீ. ற்கும் குறைந்த கார்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 1000 சீ.சீ. என்ஜின் கொள்ளளவுடைய சாதாரண காரொன்றுக்கான வரி 15 இலட்சம் ரூபாவால் இன்று (01) அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 1000 சீ.சீ. என்ஜின் கொள்ளளவு கொண்ட ஹைப்ரிட் ரக காருக்கான வரி 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் ரக பெட்ரோல் வாகனங்களுக்கான வரி 15 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்ச்சிகே குறிப்பிட்டார். இந்த வரி அதிகரிப்பின் தாக்கம் காரணமாக வாகனங்களின் விலை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.