சிகரெட் மீதான கலால் வரி அதிகரிப்பு

சிகரெட் மீதான கலால் வரி அதிகரிப்பு

by Staff Writer 01-08-2018 | 12:32 PM
Colombo (News 1st) சிகரெட்டுக்கள் மீதான கலால் வரி 3 ரூபா 80 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பிற்கு அமைய சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. சிகரெட் நிறுவனங்களில் 50 ரூபாவாக காணப்பட்ட சிகரெட் ஒன்றின் விலை, 55 ரூபாவாகவும் 55 ரூபாவாகக் காணப்பட்ட சில்லரை விலை 60 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.