ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

இலங்கை விமான சேவை, மிஹின் லங்கா நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

by Staff Writer 01-08-2018 | 10:13 AM
Colombo (News 1st) இலங்கை விமான சேவை, மிஹின் லங்கா நிறுவனம் மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 5 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விமான சேவை, மிஹின் லங்கா நிறுவனம் மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.