வெல்லவாய – கொடவெஹெரகலயில் காட்டுத் தீ

வெல்லவாய – கொடவெஹெரகலயில் காட்டுத் தீ

வெல்லவாய – கொடவெஹெரகலயில் காட்டுத் தீ

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2018 | 6:35 am

Colombo (News 1st) வெல்லவாய – கொடவெஹெரகல பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

நேற்று (31) மாலை காட்டுத்தீ பரவியுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுராதபுரம் – மள்வத்து ஓய வனப்பகுதியிலும் நேற்று மாலை காட்டுத்தீ பரவியுள்ளது.

தற்போது நிலவிவரும் வெப்பமான காலநிலை காரணமாக காட்டுத்தீ பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் மாநகர சபையின் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ காரணமாக 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்