கெப்பிட்டல் மகாராஜா நிறுவன குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதனுக்கு ஆசியாவின் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான விருது

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2018 | 8:23 pm

Colombo (News 1st)  கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதன், ஆசியாவின் சிறந்த பெண் தலைமைத்துவத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியாவின் பெண்களுக்கான தலைமைத்துவ விருது வழங்கல் விழாவின் போது இந்த விசேட விருது அவருக்கு வழங்கப்பட்டது.

CMO ஆசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது வழங்கும் விழாவில் 110 நாடுகள் பங்கேற்றிருந்தன.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின், MBC Networks (PVT) LTD – இன் குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதன், ஆசியாவின் 25 சிறந்த பெண் ஆளுமையாளர்களில் முதன்மையானவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்