எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு சம்பந்தனுக்கு எவ்வித இயலுமையும் இல்லை: ஜீ.எல்.பீரிஸ்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு சம்பந்தனுக்கு எவ்வித இயலுமையும் இல்லை: ஜீ.எல்.பீரிஸ்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு சம்பந்தனுக்கு எவ்வித இயலுமையும் இல்லை: ஜீ.எல்.பீரிஸ்

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2018 | 8:40 pm

Colombo (News 1st)  எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு இரா.சம்பந்தனுக்கு எவ்வித இயலுமையும் இல்லை என முன்னாள் அமைச்சர், ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்ற சட்டம் மற்றும் சம்பிரதாயம் தொடர்பில் இரா. சம்பந்தன் வௌியிட்ட கருத்து பாராளுமன்ற சட்டத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் எதிரானது என ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

சுதந்திர இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்காக அந்தக் கட்சிக்கு குறைந்த பட்சம் 10 வீத ஆசனங்கள் இருக்க வேண்டும். சம்பந்தனுக்கு 10 வீத ஆசனங்கள் கூட இல்லை. பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக சம்பந்தன் அந்த பதவியை வகிக்க முடியாது என ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆரம்பத்தில் இருந்து இரா. சம்பந்தன் அரசாங்கத்தின் பொறுப்புக்களையே நிறைவேற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எதிர்க்கட்சியின் குரலை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியே எழுப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்