WhatsApp-இல் Group Video, Audio வசதி அறிமுகம்

WhatsApp-இல் Group Video, Audio வசதி அறிமுகம்

by Bella Dalima 31-07-2018 | 4:09 PM
ஃபேஸ்புக்கின் WhatsApp 2018 F8 நிகழ்வில் Group Voice மற்றும் Video Call அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், Voice மற்றும் Video Group Call அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் Group Call செய்ய முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இயங்கு தளத்தில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Text Messages போல, Video மற்றும் Audio Calling வசதியும் Encrypt செய்யப்பட்ட ஒன்று என WhatsApp தெரிவித்துள்ளது.