5 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 69 வயது நபருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

5 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 69 வயது நபருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

5 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 69 வயது நபருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2018 | 4:28 pm

Colombo (News 1st)  ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 69 வயதான நபருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 20,000 ரூபா அபராதமும், 50,000 ரூபா நட்ட ஈடும் செலுத்துமாறு குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அசல பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கூட்டிச்செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சிறுமியை அழைத்துச்சென்ற குறித்தநபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்