மன்னாரில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அமெரிக்காவில் பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அமெரிக்காவில் பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அமெரிக்காவில் பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2018 | 4:35 pm

Colombo (News 1st)  மன்னார் சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நீதிமன்ற அனுமதியைக் கோரியுள்ளதாக மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருக்கும் விசேட சட்ட வைத்திய நிபுணர் W.R.A.S. ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை அறிந்துகொள்வதற்கான (Radiocarbon Dating) கார்பன் பரிசோதனைக்கு அவை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, நீதிமன்ற அனுமதியுடன் மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் W.R.A.S. ராஜபக்ஸ கூறினார்.

44 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரையில் 60 பேரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்