புதிய ஏவுகணைக் கட்டமைப்பில் வட கொரியா

புதிய ஏவுகணைக் கட்டமைப்பில் வட கொரியா

புதிய ஏவுகணைக் கட்டமைப்பில் வட கொரியா

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2018 | 10:36 am

புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கட்டமைக்கும் பணியில் வட கொரியா ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் உளவு செய்மதி, வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணைக் கட்டமைப்பு நடவடிக்கைளை கண்டறிந்துள்ளதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கும் இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது, வட கொரியாவின் அணுவாயுதக் களைவில் இணைந்து பணியாற்றுவதாக இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியிருந்தனர். அதேநேரம், வட கொரியாவிடமிருந்து நீண்ட நாட்களிற்கு அணுவாயுத எச்சரிக்கை வராது எனவும் ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்