திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

31 Jul, 2018 | 6:41 am

Colombo (News 1st)

உள்நாட்டுச் செய்திகள்

01. நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.

02. நீதிமன்றத்தை அவதூறு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கக் கட்டளை ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (30), பிரதிவாதியான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் கையளித்துள்ளது.

03. அரச வங்கியொன்றின் பணிப்பாளர் ஒருவர் தாம் பணிப்பாளராக பதவி வகிக்கும் மற்றுமொரு நிறுவனத்திற்காக அதே வங்கியிலிருந்து 1,000 கோடி ரூபா கடன் பெற்ற ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

04. விமான நிலையங்களிற்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

05. கிரிபத்கொட – டிங்கியாவத்த மைதானத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின்போது ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. வியட்நாமில் மினிபஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் மணமகன் உட்பட 13 பேர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

02. சிறை வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

01. காலி சர்வதேச மைதானத்தின் கட்டடங்களை அகற்றுவது தொடர்பில் யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காமினி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்