சிரியாவில் 30க்கும் அதிகமானோரைக் கடத்திய ஐ.எஸ்.

சிரியாவில் 30க்கும் அதிகமானோரைக் கடத்திய ஐ.எஸ்.

சிரியாவில் 30க்கும் அதிகமானோரைக் கடத்திய ஐ.எஸ்.

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2018 | 8:45 am

சிரியாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் பெண்கள், சிறுவர் உட்பட 30இற்கும் மேற்பட்டோர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் கடத்தப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் சுவேய்டா பிராந்தியத்தில் நடத்தப்பட்ட கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து இவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகம் தகவல் வௌியிட்டுள்ளது.

சிரியாவின் அநேகமான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றபோதிலும், குறுகிய நிலப்பரப்பிற்குள் ஐ.எஸ். அமைப்பு நிலைகொண்டுள்ளது.

அத்துடன், தெற்கு பிராந்தியத்தில் போராளிக்குழுக்கள் வசமுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டங்களை அரச சார்புப் படைகள் நடத்தியிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்