கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதென ஸ்டாலின் தெரிவிப்பு

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதென ஸ்டாலின் தெரிவிப்பு

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதென ஸ்டாலின் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2018 | 7:49 am

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (29) வௌியான வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையின் பிரகாரம் முதலில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சைகளுக்கு பின்னர் உடல்நிலை சீராகி வருவதாகவும் அவர் நேற்று (30) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலையினால் நேற்று கலைஞரின் உடல்நிலை தொடர்பில் அறிக்கை வௌியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், எவ்வித மருத்துவ உபகரணங்களின் உதவியுமின்றி கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு, கலைஞர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்ற தொல் திருமாவளவன், ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்