English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
30 Jul, 2018 | 6:40 am
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் திருத்தவேலைப்பணிகளின் முதற்கட்டப் பணிகள் தற்போது நிறைவுக்கு வரவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களைப் பகிர்ந்தளித்து, தகவல்களைத் திரட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் இதன் 2ஆம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படுவதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள பெயர்கள், புதிதாக உட்சேர்க்கப்பட்ட வேண்டிய பெயர்கள் என்பவற்றை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல்கள் மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூர் அதிகாரசபை அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
இந்தப் பட்டியல்களைப் பரிசீலணை செய்வதன் மூலம், எவரேனும் தகைமையுள்ள ஒரு வாக்காளரின் பெயர் 2018ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதியப்படுவதற்காகப் பரிந்துரை செய்யப்படவில்லை என தெரியவருமிடத்து, அவருக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது.
அதேநேரம், தகைமையற்ற ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பின் அவருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் அவகாசம் உள்ளது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.
22 Jan, 2021 | 03:42 PM
10 Jul, 2018 | 07:46 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS