சுற்றுலாத் துறையில் முச்சக்கரவண்டி சாரதிகள்

முச்சக்கரவண்டி சாரதிகளை சுற்றுலாத் துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம்

by Staff Writer 30-07-2018 | 9:02 AM
முச்சக்கரவண்டி சாரதிகளுக்குப் பயிற்சிகளை வழங்கி, சுற்றூலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (30) காலிமுகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, பயிற்சியை நிறைவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகள் 150 பேருக்கு இலச்சினை மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கப்படவுள்ளன. இந்த இலச்சினையை முச்சக்கரவண்டியில் பொருத்துவதன் மூலம், பயணிகளால் குறித்த முச்சக்கரவண்டிகளை இலகுவில் அடையாளம் காணமுடியும் எனவும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு , எல்ல, பெந்ன்தோட மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் 750 பேர் இந்த பயிற்சியை நிறைவு செய்துள்ளதுடன், இவர்களுக்கும் விரைவில் சான்றிதழ் மற்றும் இலச்சினை வழங்கப்படவுள்ளது. சுற்றூலாத்துறையில் இணைக்கப்படும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு தனிப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.