புத்தளம் தனியார் பஸ் சாரதிகள் பகிஷ்கரிப்பில்

புத்தளம் தனியார் பஸ் சாரதிகள் பகிஷ்கரிப்பில்

by Staff Writer 30-07-2018 | 5:20 PM
Colombo (News 1st) புத்தளம் தனியார் பஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பஸ் சாரதியொருவர் மீது தாக்குல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 27 ஆம் திகதி சிலாபம் - கொழும்பு சாதாரண சேவை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (30) சிலாபம் தனியார் பஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புத்தளம், கொழும்பு தனியார் பஸ் ​சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.