பலாங்கொடை - இம்புல்பேயில் தொடர்ந்தும் பரவும் தீ

பலாங்கொடை - இம்புல்பேயில் தொடர்ந்தும் பரவும் தீ

by Staff Writer 30-07-2018 | 12:57 PM
Colombo (News 1st) பலாங்கொடை - இம்புல்பே, பரவியன்கல பகுதியில் பரவிய தீ தொடர்ந்தும் பரவி வருவதாக இம்புல்பே பிரதேச சபை தெரிவித்துள்ளது. நேற்று (29) முதல் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும் அது பலனளிக்கவில்லை என இம்புல்பே பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். காட்டுத்தீ காரணமாக இதுவரை 50 ஏக்கருக்கும் அதிகமான பகுதி அழிவடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். காட்டுத்தீ பரவுகையுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். இம்புல்பே - பரவியன்கல மலைப்பகுதி ஆதரே கந்த என்ற பெயரில் பல்கலைக்கழக கற்கையில் அறியப்படுகின்றது.