ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 30-07-2018 | 6:07 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. மட். – மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டட அங்குரார்ப்பண விழாவில் பேசிய பிரதமர், நாம் நாட்டைப் பொறுப்பேற்றபோது நிதியிருக்கவில்லை எனத் தெரிவித்தார். 02. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பவித்ரா வன்னியாராச்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்காக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா நேற்று (29) குற்றஞ்சாட்டினார். 03. 'கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல் வாதிகள்' என வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 04. சிறைச்சாலைகளுக்குள் சட்டங்கள் பின்பற்றப்படாமையே, கைதிகள் தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான காரணம் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 05. புளத்சிங்கள – நாரகல பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணத்தைக் கொண்டுசென்ற வேனின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்தோனேஷியாவில் 6.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். 02. பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கட் வீரரும் பாகிஸ்தான் டெஹ்ரிப் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் தெரிவுசெய்யப்பட்டார். விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை தேசிய மட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வட மாகாணத்தின் முதல் வீரராக விஜயகாந்த் வியாஷ்காந்த் பதிவானார். 02. இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.