கிரிபத்கொடயில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கிரிபத்கொடயில் ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

by Staff Writer 30-07-2018 | 11:35 AM
Colombo (News 1st) கிரிபத்கொட - டிங்கியாவத்த மைதானத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின்போது ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து இன்று (30) அதிகாலை இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.