யுனெஸ்கோ பரிந்துரை செய்ததான தகவல்கள் பொய்யானவை

காலி மைதானத்தின் கட்டடங்களை அகற்றுவது குறித்து யுனெஸ்கோ பரிந்துரை செய்ததான தகவல்கள் பொய்யானவை

by Staff Writer 30-07-2018 | 8:48 PM
Colombo (News 1st) காலி சர்வதேச மைதானத்தின் கட்டடங்களை அகற்றுவது தொடர்பில் யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காமினி விஜேசூரிய தெரிவித்துள்ளார். துறைமுகமொன்றை அமைப்பது தொடர்பிலான தகவல்களைத் தமது அமைப்பிற்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு யுனெஸ்கோவின் காலி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உலக மரபுரிமை தொடர்பிலான பிரதி இணைப்பாளராக 3 வருடங்கள் பணியாற்றியுள்ள  தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காமினி விஜேசூரிய, இன்று (30) காலை ஒளிபரப்பான பெதிக்கட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.
குறிப்பாக இது தொடர்பிலான இறுதிக் கூட்டம் கடந்த ஜுலை மாதம் நடைபெற்றிருந்தது. நானும் அவ்விடத்தில் இருந்தேன். அந்த கூட்டம் பஹ்ரைனில் நடைபெற்றிருந்தது. சர்வதேச தரப்பினர் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது தொடர்பில் உங்களுக்குத் தெரியும். 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அந்த கூட்டம் நடைபெற்றது. 18 ஆம் ஆண்டு தீர்மானங்களின் படி அந்த மைதானத்தை அகற்றவோ அல்லது அந்த மைதானத்தின் பார்வையாளர் அரங்கை அகற்றுவது தொடர்பிலோ எந்தவொரு விடயமும் கூறப்படவில்லை. இதற்கு முன்னர் இது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. எனினும், 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு அந்த கலந்துரையாடல் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த கலந்துரையாடலானது வேறொரு பக்கத்துக்கு மாற்றமடைந்தது. விசேடமாக துறைமுகமொன்றை அமைக்க முயற்சிக்கின்றனர். உலக பாரம்பரியத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் வியப்பாக உள்ளது. யாராவது அந்த விடயத்தை உற்றுநோக்குமிடத்து எமது அரசாங்கம் எதை கேட்டுள்ளது என்பது எமக்குத் தெரியும். துறைமுகம் தொடர்பிலான அறிக்கையை அனுப்புமாறும் அதனது முகாமைத்துவம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் விளக்கமொன்றை அளிக்குமாறுமே கூறப்பட்டுள்ளதாக காமினி விஜேசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.