1000 கோடி கடன்பெற்ற வங்கி பணிப்பாளர் குறித்த தகவல்

ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்ற வங்கி பணிப்பாளர் குறித்த தகவல்

by Staff Writer 30-07-2018 | 9:17 PM
Colombo (News 1st) அரச வங்கியொன்றின் பணிப்பாளர் ஒருவர் தாம் பணிப்பாளராக பதவி வகிக்கும் மற்றுமொரு நிறுவனத்திற்காக அதே வங்கியிலிருந்து 1,000 கோடி ரூபா கடன் பெற்ற ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரச வங்கியொன்றின் பணிப்பாளர் பெற்றுள்ள இந்தக் கடன்தொகை, குறித்த வங்கி ஸ்தாபிக்கப்பட்ட கடந்த 65 வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கடன் தொகையாகும் என தேசய பத்திரிகை செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் வங்கியின் பணிப்பாளர் சபை மற்றும் கடன் குழுவின் பூரண அனுமதியுடன் இந்தக் கடன் தொகை பெறப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்த வங்கியின் தலைவரிடம் தேசய பத்திரிகை தொடர்பாக வினவியபோது, தகவல்கள் உண்மையானவை என உறுதிப்படுத்திய அவர், முறையாகவே இந்தக் கடன் தொகை வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். வங்கிப் பணிப்பாளர் தொடர்புபட்டுள்ள ஒரு நிறுவனத்திற்கு கடனை வழங்குவதன் மூலம் சட்ட சிக்கல் ஏற்படாதா என வங்கித் தலைவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் பதில்வழங்க மறுத்ததாகவும் பத்திரிகை செய்தியில் குறிப்பிப்பட்டுள்ளது. இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் ஆராய்ந்தபோது, 1,000 கோடி ரூபா கடன் மக்கள் வங்கியினால் சீ.எம்.எல். வோக்கர்ஸ் என்ற கட்டட நிர்மாண ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை தெரியவந்தது. 2014 ஆம் ஆண்டளவில் குறித்த வங்கி நிறுவனத்துக்கு 5,000 கோடி ரூபா கடனை வழங்கியதாக மக்கள் வங்கியின் கடன் குழுவின் தலைவர் கலாநிதி அமிந்த மெத்சில நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார். அந்தக் கடன் தொகையை குறித்த நிறுவனம் முறையாக செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி 5,000 கோடி ரூபா வரையில் வோக்கர்ஸ் நிறுவனத்துக்கு கடனை வழங்கும் இயலுமை காணப்படுவதாக கலாநிதி அமிந்த மெத்சில கூறினார். சீ.எம்.எல். வோர்க்கஸ் நிறுவன 2016 , 2017 ஆம் அண்டு வருடாந்த அறிக்கையின் பிரகாரம் குழுமத்தின் நிறைவேற்று உபதலைவராக செயற்படும் ஜெஹான் அமரதுங்க, மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராவார். அதேநேரம், 2010 ஆம் ஆண்டிலிருந்து அவர் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் அவர், குறித்த காலப்பகுதியில் வங்கியின் தலைவராக காமினி செனரத் பணியாற்றியிருந்தார். இதேவேளை, சீ.எம்.எல் வோர்க்கஸ் நிறுவனம் அரச வீதிகள் பாலங்கள் உள்ளிட்ட பல நிர்மாணப் பணிகளை முன்னெடுத்திருந்ததுடன், மத்திய அதிவேக வீதியின் 2ஆம் கட்டத்தின் ஒரு பகுதியும் அதில் அடங்குகின்றது. தாம் பணிப்பாளராக கடமையாற்றும் அரச வங்கியொன்றில் இருந்து சுமார் 1,000 கோடி ரூபாவை கடனாகப் பெற்று தமது நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவது நியாயமானதா? அது சட்டபூர்வமானதா? நாட்டு மக்களின் பணமே அரச வங்கியிடம் உள்ளது. அந்தப் பணத்தினை முறையாக முகாமைத்துவத்திற்கு உட்படுத்தி நாட்டு மக்களுக்கு பலனை பெற்றுக்கொடுக்க வேண்டும் அல்லவா? அரச வங்கியொன்றிலிருந்து 1,000 கோடி ரூபா கடனை பெற்றுக்கொள்ளும்போது அதற்கான இறுதித் தீர்மானம் உரிய நடைமுறைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதா? இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் தொடர்ந்தும் அவதானத்துடன்...