ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2018 | 8:16 am

Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் இதுவரை செயற்படுத்தப்படாமையால் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ஜானக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணிபகிஷ்கரிப்பிற்கு ரயில் சாரதிகள் மற்றும் ரயில் காப்பாளர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்