புளத்சிங்கள கொள்ளைச் சம்பவத்தில் வேன் சாரதி கைது

புளத்சிங்கள கொள்ளைச் சம்பவத்தில் வேன் சாரதி கைது

புளத்சிங்கள கொள்ளைச் சம்பவத்தில் வேன் சாரதி கைது

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2018 | 1:12 pm

Colombo (News 1st) புளத்சிங்கள – நாரகல பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணத்தைக் கொண்டுசென்ற வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேனில் பயணித்த பாதுகாப்பு அதிகாரியும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளைச்சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்களுக்கு கொள்ளையடிப்பதற்கு ஏற்றவகையில் செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின்போது, பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கி காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை வீதி நாரகல பகுதியில் தன்னியக்க இயந்திரங்களில் வைப்பிலிடுவதற்காக நேற்றிரவு நாரஹேன்பிட்டிய பகுதி நிறுவனமொன்றினால் பணம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

பணத்தைக் கொண்டுசென்ற வேனை வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் நிறுத்திவைத்து, உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜீப் வண்டியில் முகமூடியணிந்து வந்த சந்தேகநபர்கள், வேனில் இருந்தவர்கள் மீது மிளகாய்த் தூளை எரிந்து தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்