பவித்ரா வன்னியாரச்சி மீது சொய்ஸா பாய்ச்சல்!

பவித்ரா வன்னியாரச்சி மீது சொய்ஸா பாய்ச்சல்!

பவித்ரா வன்னியாரச்சி மீது சொய்ஸா பாய்ச்சல்!

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2018 | 8:39 pm

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பவித்ரா வன்னியாராச்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்காக செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இன்று (29) குற்றஞ்சாட்டினார்.

எம்பிலிபிட்டிய விகாரையில் நேற்று நடைபெறவிருந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி கலந்துகொள்ளாமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, எம்பிலிபிட்டிய – ஹீந்தளுக்ஹின்ன நாக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் உருவச்சிலையை திரைநீக்கம் செய்யும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொள்ளாமல், சமல் ராஜபக்ஸ கலந்துகொண்டமையால் அமைதியின்மை ஏற்பட்டதுடன், இதன்போது சமல் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் உரையாடியபோது கிடைத்த பதில் தொடர்பில், நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் கடும் அதிருப்தி வௌியிட்டமை குறித்தும் அவர் கருத்து வௌியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்